ஆய்வுகள் அளிக்கும் ஆதாரங்கள்... தமிழகத்துக்குக் கிடைக்குமா கவுரவம்?
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான சர்ச்சைகள் அனைவரும் அறிந்ததே. ஆனால், அறியாத ஒரு தமிழகம் சார்ந்து சர்ச்சையும் அங்கு முளைத்திருக்கிறது. அது, அயோத்தியாவில் அரசி ‘ஹியோ ஹவாங் ஓக்கே’வுக்கு (HEO HWANG OK) மணிமண்டபம் கட்டுவது. அரசி யாருக்குச் சொந்தம்? தமிழகத்துக்கா அல்லது அயோத்திக்கா என்பதில்தான் சர்ச்சை இப்போது. முழுமையாகப் புரிய 2000 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிப்போம்!