தமிழகக் கடற்கரைகளில் கிடைக்கப்பெற்ற சீனத் தரவுகளில் கொரியத் தொல்லியல் கூறுகள் காணப்படுகின்றன. ஜப்பானில் உள்ள தமிழ்த் தொடர்புகளும், வட மற்றும் தென்னமெரிக்கத் தமிழ் கடல்சார் உறவுகளும் கொரிய நாட்டுக் கடல்சார் தொடர்புகளை உறுதி செய்கின்றன. இன்றும்கூடத் தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரிய மக்கள் வசிக்கிறார்கள். இங்கிருந்து கொரியாவுக்குத் தொடர்ந்து கடல் வணிகம் நடந்துகொண்டிருக்கிறது. கொரியாவிலும் தமிழக மக்கள் நிறைய பேர் வசிக்கின்றனர்.